கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.
ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளொடு
நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப்பாவிகளோடு உறவை
ஒழித்துவிட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் இறைஞ்சுமவரான
எம்பெருமானாருடைய சிறந்த சீலகுணமொன்றையே சிந்தியாநின்றது; இப்படிப்பட்டதொரு
பெருந்தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய
நிர்ஹேதுக க்ருபாகடாக்ஷமே யொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு
No comments:
Post a Comment