Tuesday 17 May 2016








பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.

 தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியார் அப்பூவைவிட்டு “அகலகில்லேன் இறையும்” என்று வந்து மிக்க விருப்பத்துடன் வஸிக்கப்பெற்ற திருமார்பை யுடையனான திருமாலினது திவ்ய குணசேஷ்டிதங்களை நிறைத்துக்கொண்டிருக்கிற திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அருளிச்செய்த நம்மாழ்வாருடைய திருவடிகளைதொழுது ஸத்தை பெற்றவாயும், பலபல சாஸ்த்ரங்களைக்கற்றும் உஜ்ஜீவநோபாயத்தில் த்ருடாத்யவஸாயமின்றியே ஸம்சய விபர்யயங்கள்கொண்டு தடுமாறு கின்றவர்களை ஒரு நிச்சயஜ்ஞானத்திலே நிலைநிறுத்தி வாழ்விக்கவந் ரதவதரித்தவராயுமிருக்கிற எம்பெருமானாருடைய திருவடிகளை நாம் ஆச்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு அவருடைய திருநாமங்களை வாயாரப் பேசுவோமென்று தமது திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுகிறாராயிற்று.
பல்கலையோர் தாம்மன்ன = நாநா சாஸ்த்ரங்களைக் கற்று வல்லவர்களான ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய மஹான்கள் ப்ரதிஷ்டிதராகைக்காக என்றுமாம். எம்பெருமானாருடைய சரணுரவிந்த ப்ராப்திக்கும் ஸாதநம் அவருடைய திருநாமஸங்கீர்த்தநமேயாம் என்பது இப்பாசுரத்தின் கருத்து

No comments:

Post a Comment