Asmath Gurubyo Nama:
நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே.
விளக்க உரை :
***- ஸத்துக்கள் உம்மைக் கைவிடும்படி
உம்பக்கல் என்ன புன்மையிருந்ததென்ன; அநாதிகாலமாகப் பரத்ரவ்யாபஹாரமும்
பரதாரபரிக்ரஹமும் பண்ணிப்போந்தேன் என்று முன்னிரண்டடிகளாற் கூறியபின்னர்,
‘இப்போது எப்படியிருக்கிறீர்?’ என்று கேட்க, இப்போது ஆழ்வாருடைய அருளுக்கு
இலக்காகப்பெற்றுச் சதிரனாய்விட்டேன் என்கிறார் பின்னிரண்டிகளால்.
முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக்
களவுசெய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும் நன்பொருள் என்ற
ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக்கடவது. ஈச்வரனுக்கு மேஷபூதமான
விலக்ஷண ஆத்மவஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற
ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை.
“***“-யோந்யதாஸந்தமாத்மாநம
ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை
இங்கு அநுஸந்திக்க.
“***“-உத்தம: புருஷஸ்த்வந்ய?” என்கிற
ப்ரமாணச்சாயையாலே எம்பெருமானைப் பிறர் என்கிறது. இப்படி ஆத்மாபஹாரம்
பண்ணினே னாகையால் அதற்குப் பலமான விஷய ப்ராவண்யப் படுகுழியிலே
விழுந்தேனென்கிறார் இரண்டாமடியில்; பகவத் பாகவதவிஷயத்திலே வைக்கவேண்டிய
மஹாவிஸ்வாஸத்தை மின்னிடை மடவார் திறத்திலே வைத்தேனென்கிறார்.
நம்பிள்ளை ஈடு:- “ரத்நாபஹாரம்பண்ண
அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவுகாண அஞ்சுமோ? ஈஸ்வரன் ‘என்னுடையது’ என்று
அபிமாநித்திருந்த (ஆத்ம) வஸ்துவை அபஹரித்தவன், ஸாமாந்யர் ‘என்னது” என்று
அபிமாநித்திருக்கும் வஸ்துவை அபஹரிக்கச் சொல்லவேணுமோ?”
நம்புதல்-விரும்புதல்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”
இப்படியிருந்த நீர் ஆழ்வாரைக்கிட்டினபடி
எங்ஙனே? என்று கேட்க; மடவார்களை ஆராதிப்பதற்காகப் பொருள்தேடிக்
கொள்ளையடிப்பதற்கு இடம் பார்த்துத் திரியாநிற்கையில் அச்செம்பொன் மாடத்தைக்
களவுகாணப் போனேன்; அங்கே வைத்தமாநிதியைக்கண்டு அகப்பட்டேனென்கிறார்;
இவர்க்கு வைத்தமாநிதி ஆழ்வாரேயாம்.
சதிர்த்தேன்-க்ருதக்ருத்யனானேன் என்றபடி. சதுர என்ற வடசொல் சதிர் எனத்திரிந்து அது அடியாகப்பிறந்த வினைமுற்று இது.
No comments:
Post a Comment